கல்லைத்தான்

கவிஞர்கள் என்றுமே வளமாக வாழ்ந்ததில்லை.
ஒரு புலவர் தன் நிலைமயை இப்படிக் கூறுகிறார்

கல்லைத்தான் மண்ணைத்தான்
.காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
.எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான்
ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
.புவியில்தான் பண்ணினானே!

பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்

கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கவாவது (கடவுள்) சொல்லித்தந்திருக்கவேண்டும்.

அல்லது

கொஞ்சம் தங்கத்தைக் கொடுத்தாவது காப்பாற்றியிருக்கவேண்டும்,

அல்லைத்தான் = அல்லலைத்தான் ( துன்பத்தைத் தான்)

துன்பத்தை யாரிடம் சொல்வது?
யாரை நொந்து கொள்வது?

எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையைக்
கொடுத்துவிட்டானே இந்த பிரம்மா?

பதுமத்தான் = பிரம்மா (பத்மம் = தாமரை)

அர்தத்தைவிட பாட்டு சூப்பர்

’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள் அழகான வசனமாகப் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் பாட்டை நினைவில் வைத்துத்தான் அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் என்று கவியரசர் எழுதியாகச் சொல்வார்கள்.

Leave a comment