கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும்

கேள்வி கேட்பது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனல் கேள்விகள் எத்தனை வகைப்படும் தெரியுமா?

கேள்விகளை ஒரு ஆறு வகையாகப் பிரித்திருக்கிறார்கள், அதே போல ‘பதில்’ களை 8 வகையாகப் பிரித்திருக்கிறார்கள்

எங்கே? எப்படி?

13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட நன்னூல் என்ற தமிழ் இலக்கண புத்தகத்தில் இப்படி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்

இந்த நன்னூல் தொல்காப்பியம் என்னும் மிகப் பழைய இலக்கண நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது

தொல்காப்பியம் ORIGINAL EDITION. என்றால் நன்னூல் LATEST REVISED EDITION என்று கொள்ளலாம்

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் சுமார் 400 BC. நன்னூல் எழுதப்பட்டது 1300 AD

இதே போல சம்ஸ்கிருதத்திலும் பாணினி என்னும் இலக்கண புத்தகம் இருக்கிறது. அதற்கும் முன்னர் ஐந்திரம் என்ற சம்ஸ்கிருத இலக்கண நூல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த தமிழ் தொல்காப்பியமும் அந்த சம்ஸ்கிருத பாணினியும் ஒரே காலத்தவை என்று சொல்லப்படுகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம்

கேள்விகள் 6 வகை. என்னென்ன?

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை,
ஏவல் … தரும் வினா ஆறும் ………
என்று நன்னூல் சொல்கிறது.

question

சரி, பதில்கள் எப்படியாம்?

சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல்,
உற்றது உரைத்தல், உறுவது கூறல்,
இனமொழி எனும் ………..

ans

எப்படியெல்லாம் விஷயத்தை பிரிச்சிருக்காங்க பாருங்க.

Leave a comment