அபிராமி பதிகம்

 

அபிராமி பதிகம்
===========

 

கங்கையொடு தும்பையும்
அணிந்தவர் வியக்கும் கலா மதியை நிகர் வதனமும்,
கருணை பொழி விழிகளும்,
விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்,
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு மணி மிடறும் (Neck)
மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம் இலங்கு கர தலமும், (hands)
விரல் அணியும் அரவும்,
புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும்,
பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே- போற்றி என வாழ்த்த, விடை மேல் ( Upon the Rishaba)
மங்களம் மிகுந்த நின் பதியுடன் (siva) வந்து,
அருள் செய்;
வளர் திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 2-(1)

 

கலையாத கல்வியும்,
குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும்,
குன்றாத இளமையும்,
கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும்,
அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும், (dharmam without restraints)
தொலையாத நிதியமும், (limitless wealth)
கோணாத கோலும், (upright justice)
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;

அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! 1-(1)

 

சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சலச லோசன மாதவி!
சம்ப்ரம பயோதரி! சுமங்கலி! சுலட்சணி! சாற்ற அரும் கருணாகரி!
அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோத்ரி! அமலை! செக சால சூத்ரி!
அகில ஆத்ம காரணி! வினோத சய நாரணி! அகண்ட சின்மய பூரணி!
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி! (வரை = மலை)
கௌமாரி!
உத்துங்க கல்யாணி! புட்ப அத்திர அம்புய பாணி!
தொண்டர்கட்கு அருள் சர்வாணி!
வந்து அரி, மலர்ப் பிரமராதி துதி, வேத ஒலி வளர் திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 2-(2)

கார் அளக பந்தியும், பந்தியின் அலங்கலும், கரிய புருவச் சிலைகளும்,
கர்ண குண்டலமும், மதி முக மண்டலமும், நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக்,
கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும், சிறிய கொவ்வையின் கனி அதரமும்,
குமிழ் அனைய நாசியும், குந்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும்,
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும், மேகலையும், மணி நூபுரப் பாதமும்,
வந்து எனது முன் நின்று, மந்தகாசமுமாக வல் வினையை மாற்றுவாயே;
ஆர மணி வானில் உறை தாரகைகள் போல நிறை ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! 1- (2)

 

வாச மலர் மரு அளக பாரமும், தண் கிரண மதி முகமும், அயில் விழிகளும்,
வண்ண நிகர் முலையும், மான் நடையும், நகை மொழிகளும், வளமுடன் கண்டு, மின்னார்
பாச பந்தத்திடை, மனம் கலங்கித், தினம் பல வழியும் எண்ணி, எண்ணிப்
பழி பாவம் இன்னது என்று அறியாமல், மாயப்ர- பஞ்ச வாழ்வு உண்மை என்றே,
ஆசை மேலிட்டு, வீணாக, நாய் போல் திரிந்து அலைவது அல்லாமல், உன்றன்
அம்புயப் போது எனும் செம் பதம் துதியாத அசடன் மேல் கருணை வருமோ?
மாசு இலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 2-(3)

 

============

 

மகர வார் குழை மேல் அடர்ந்து, குமிழ் மீதினில் மறைந்து, வாளைத் துறந்து,
மைக் கயலை வென்ற நின் செங்கமல விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ-
செகம் முழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து, மேல் சிங்காசனத்தில் உற்றுச்,
செங்கோலும், மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிரி உலகு ஆண்டு, பின்பு
புகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி, நிறை புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்;
அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! 1-(3)

 

நன்று என்று, தீது என்று நவிலும் இவ் இரண்டனுள், நன்றதே உலகில் உள்ளோர்
நாடுவார் ஆதலின், நானுமே அவ்விதம் நாடினேன்;
நாடினாலும் அன்று (No) என்று சொல்லாமல்,
நினது திரு உள்ளம் அது இரங்கி, அருள் செய்குவாயேல்
ஏழையேன் உய்குவேன்,
மெய்யான மொழி இ·து;உன் இதயம் அறியாதது உண்டோ?
குன்றம் எல்லாம் உறைந்து, என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த குமரி!
மரகத வருணி! விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி!
மன்றல் மிகு நந்தன வனங்கள், சிறை அளி முரல, வளர் திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ்< வாமி! அபிராமி உமையே! 2-(4)

 

மறி கடல்கள் ஏழையும், (seven seas)
திகிரி இரு நான்கையும், (eight mountains)
மாதிரக் கரி எட்டையும், (அஷ்ட திக் கஜங்கள் -(உலகைத் தாங்கும் 8 பெரிய யானைகள்)
மா நாகம் ஆனதையும்,
மா மேரு என்பதையும்,
மா கூர்மம் ஆனதையும்,
ஓர் பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும், (ஆதிசேஷன் தாங்கும் இந்த பூமியையும்)
புத்தேளிர் கூட்டத்தையும், (தேவர் உலகு)
பூமகளையும்,
திகிரி மாயவனையும், (சக்கரம் கொண்ட திருமால்)
அரையில் புலி ஆடை உடையானையும்,( சிவன்)
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப், ( இவர்களை எல்லாம் ஈன்றவள் நீ)
பழைமை முறைமை தெரியாத நின்னை- (none knows how ancient you are)
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் மொழிகின்றது ஏது சொல்வாய்?
(they say you are a child. strange indeed)
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! 1-(4)

 

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; நான் உலகத்து உதித்த இந் நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால், தீராத இன்னல் கொண்டு, உள்ளம் தளர்ந்து, மிகவும்
அரு நாண் அற்றிட்ட வில் போல் (bow without string-useless)
இருக்கும் இவ் அடிமைபால் கருணை கூர்ந்து,
இங்கு அஞ்சேல் எனச் சொல்லி, ஆதரிப்பவர்கள்
உனை அன்றி இலை உண்மையாக (none other than you)
இரு நாழிகைப் போதும் வேண்டாது, நிமிடத்தில் இவ் அகில புவனத்தையும்
இயற்றி, அருளும் திறம் கொண்ட நீ, ஏழையேன் இன்னல் தீர்த்து, அருளல் அரிதோ?
வரு நாவலூரர் முதலோர் பரவும், (sunthara murthy swamgal முதலியவர்கள் தொழும்)
இனிய புகழ் வளர் திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 2-(5)

 

வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர,
அருள் மழை பொழிந்தும்,
இன்ப வாரிதியிலே
நின்னது அன்பு எனும் சிறகினால்
வருந்தாமலே அணைத்துக்,
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் (elephant) கூட்டம் முதலான
சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்,
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின் உதர பந்தி பூக்கும்
நின்மலீ! அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும்; நீலி என்று ஓதுவாரோ?
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! 1-(5)

 

Leave a comment